தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எடுக்க உள்ள முடிவு என்ன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க ஆதரவாளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி கலந்து ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். கலந்து ஆலோசிக்காமல் முன்கூட்டியே சொல்லுவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!
கட்சித் தலைவர் என்ற அதிகாரம் இருந்தாலும் கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் கடந்த நான்காம் தேதி தேர்தல் முடிவு வெளியான நிலையில் முடிவெடுக்க தாமதம் என்று எப்படி சொல்ல முடியும் என கூறினார். முடிவெடுக்க முழு அதிகாரம் இருந்தாலும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறுமா இன்று கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து திருமாவளவன் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?