சாதிய படுகொலைகள் குறித்த உறுப்பினர்களின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேரவையில் பதிலளித்து பேசினார். அப்போது, ஆணவ படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அனைத்து சாதிகளையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம் என்றும் காலனி என்ற சொல் நீக்கம் குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளேன் என்றும் கூறினார். பள்ளி, கல்லூரி விடுதிகளில் இருக்கும் சாதி பெயரை நீக்கி இருக்கிறோம் என்றும் அதனை சமூக நீதி விடுதியாக மாற்றி உள்ளோம் எனவும் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகாரம் தான் வேற்றுமையை விரட்டும் என்றும் கூறினார்.
ஆணவ படுகொலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், சட்டம் தன் கடமையை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். சாதிய படுகொலையை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.எம். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரைக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தெரிவித்தார். சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
இதையும் படிங்க: “திருப்பி அடிக்க எனக்கும் தெரியும் திருமா... இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேணாம்” - நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!
ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது என கூறினார். நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின்படி சட்டம் இயற்றப்படும் என பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கம்... தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு திருமா உற்சாகம் வரவேற்பு...!