கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி கயவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி இருக்கிறார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேல்முருகன் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தைக்கு 4 வடமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.

அண்மையில் சென்னையில் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியை வடமாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு முன்பும் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைச் செய்ய சமூக விரோதி செயல்களில் ஈடுபடும் கயவர்களுக்கு ‘உரிமம்’ வழங்கப்பட்டுவிட்டதாக நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கயவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இத்தகைய கொடூர குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடங்குளம் மக்கள் குற்றவாளிகளா.? நோகடிக்கும் வழக்குகள்... வேல்முருகன் வைத்த முக்கிய கோரிக்கை..!