முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அரசு துறைகளின் ஆய்வுக் கூட்டங்களுக்கு ஸ்லைடு காட்சிகள் மற்றும் வீடியோ தொகுப்புகளை தயாரிக்கும் டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
விரைவில் பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட இருக்கின்றன. புதிய அரசில் முதல்வர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்கள் நிர்வாக அனுபவம் குறைவானவர்கள் என்பதால், துறைகள் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் வடிவில் விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
வரும் 22ஆம் தேதி வரை துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் விஜய் நடத்த உள்ளார். காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், ஒவ்வொரு துறையும் குறைந்தபட்சம் 20 ஸ்லைடுகள் கொண்ட விளக்கப் பொருள் மற்றும் வீடியோ தொகுப்புகளை தயாரித்து வழங்க வேண்டும் என தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! திரைமறைவில் கரூர் கம்பெனி! சிக்கும் செந்தில்பாலாஜி?!
இந்த உத்தரவுக்குப் பிறகு தலைமை செயலகத்தில் டிஜிட்டல் கிரியேட்டர்கள், கிராபிக்ஸ் டிசைனர்கள் மற்றும் வீடியோ எடிட்டர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. துறை செயலர்கள் தங்கள் துறை சார்ந்த சாதனைகள், திட்டங்கள், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை ஈர்க்கும் வகையில் ஸ்லைடுகளாகவும், குறும்படங்களாகவும் தயாரிக்க பணியாற்றி வருகின்றனர்.

முந்தைய அரசுகளில் பெரும்பாலும் காகித அறிக்கைகள் மற்றும் நீண்ட குறிப்புகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாகத்தை வேகப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் டிஜிட்டல் உள்ளடக்கம் தயாரிப்பாளர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மாற்றம் அரசு நிர்வாகத்தை இளைஞர்கள் நட்புறவு கொண்டதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் மற்றும் டேப்லெட் மூலம் தகவல்களை பார்த்து புரிந்துகொள்ளும் புதிய அணுகுமுறை தமிழக அரசின் செயல்பாட்டில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதையும் படிங்க: கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!