தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மதுரை சென்றடைந்தார். மதுரையில் இருந்து சாலை வழியாக ஜனநாயக படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்கிறார். அவரை கண்டதும் அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். கேரவன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்து விஜய் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

விஜயை வரவேற்க காலை முதல் ரசிகர்கள் திரண்டு இருந்த நிலையில் கைசைத்து உற்சாகமடைந்தனர். தன்னை யாரும் பின் தொடர வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஏற்கனவே விஜய் அறிவுரை வழங்கி இருந்தார். இந்த நிலையில் மதுரைக்கு சென்ற விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், மதுரை மக்களுக்கு வணக்கம். உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்., இன்று நான் ஜனநாயக படப்பிடிப்பிற்காக கொடைக்கானலுக்கு செல்கிறேன்.,
இதையும் படிங்க: முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்.. பதட்டமாக உள்ளது.. தொண்டர்களுக்கு சொன்ன விஷயம்..!

கூடிய விரைவில் உங்களை மதுரைக்கு வந்து கட்சியின் சார்பாக மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்.,இன்னும் ஒரு மணி நேரத்தில் அனைவரையும் பார்த்துவிட்டு சென்று விடுவோம். நீங்களும் பாதுகாப்பாக செல்லுங்கள்., யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இருந்தும் விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கேரவனை பின்தொடர்ந்து ஓடினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சிறுவாணி தண்ணி மாதிரி சுத்தமான ஆட்சி அமையும்.. சபதம் எடுத்த விஜய்..!