தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று படப்பிடிப்பிற்காக மதுரை செல்கிறார். அவரை காண காலை முதலே அவரது தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி போலீசார் அவர்களுக்கு உள்ளே நுழைய தடை விதித்த நிலையில், அலப்பறை செய்தனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்து பேசினார். அப்போது, மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2வது நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம்..! த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு..!

தான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை செல்வதாகவும், கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன் என்றும் தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து விட்டு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன் என்றும் நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.,

யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனக்கும் கேட்டுக் கொண்டார். கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வா தலைவா வா! உற்சாகம்.. ஆரவாரம்.. விஜயை வரவேற்க காலை முதலே குவிந்த தொண்டர்கள்..!