2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர்.

மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விதை உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய் அண்ணா… WE LOVE YOU VIJAY ANNA… TVK… TVK போன்ற கோஷங்கள் விண்ணை பிளக்க விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணி... திடீரென அந்தர் பல்டி அடித்த கிருஷ்ணசாமி... மதுரை டூ நெல்லை மனமாற்றம்..!
இந்த நிலையில் அரியலூரில் தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சார மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது. இதனால் விஜய் தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார். விஜயின் பிரச்சாரத்தை காண முடியாமல் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிங்க: திருச்சி மக்களோட சத்தம் கேட்குதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீண்டிய விஜய்...!