தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் விஜய் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டும் வெறும் அறிக்கையை மட்டும் விஜய் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் தங்களை வந்து விஜய் ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விகளும் எழுந்தது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவத்தின் A1 அதிரடி கைது … சாட்டையை சுழற்றும் போலீஸ்...!
எந்த ஒரு தலைவனும் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவதூறு பரப்ப வேண்டாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இது திட்டமிட்ட சரி என்றும் கூறி வருகின்றனர். விஜய்க்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில், விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆதரவாக கூறியுள்ளார். உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான் என்று நடிகர் சஞ்சய் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெருந்துயரம்... நிலைமை என்ன விஜய்? கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ராகுல்காந்தி...!