ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தும் விஜயமங்கலத்தில் கூடி இருந்த கூட்டத்தை பார்த்து கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளையடிக்காதீர்கள் என்று விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தை ஒரு பொறுப்பே இல்லை எனக் கூறிக்கொண்டு கதறுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நம் கொள்கை எதிரி என்றும் எதிரிகளை அறிவித்துவிட்டு தான் களத்திற்கு வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார். எதிரிகள் யாரென்று சொல்லிக்கொண்டு கலத்திற்கு வந்திருக்கும் நமக்கும் அவர்களுக்கும் தான் போட்டி என்றும் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியா தனக்கு கிடையாது என்றும் தெரிவித்தார். ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர் என்றும் அண்ணாவும் எம்ஜிஆர்வும் தமிழ்நாட்டின் சொத்து எனவும் தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து குறித்த கேள்வியை விஜய் எழுப்பினார். மஞ்சள் ஆராய்ச்சி மையம் என டெண்டர் விட்டு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தம்பி… நீ கீழ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன்… ஈரோட்டில் மாஸ் காட்டும் விஜய்….!
மஞ்சளுக்கு நியாயமான விலை முடிவு செய்து தரமான விதைகளை கொடுத்தால் என்ன என்பது குறித்து அவர்கள் யோசிப்பதே கிடையாது எனவும் தெரிவித்தார். விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை எப்படி முடக்கலாம் என்பதில் தான் 24 மணி நேரமும் அவர்களின் சிந்தனை இருப்பதாக தெரிவித்தார். இவ்வளவு நவீன வசதிகள் இருந்தும் அறிவியல் வளர்ச்சி இருந்தும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தும் கூட பவானி, நொய்யல், அமராவதி ஆகியவற்றை இணைக்கும் வாக்குறுதி 103 செய்தார்களா என்று கேள்வி எழுப்பினார். சொன்னிகளை செய்தீர்களா என்று அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் முன் வைத்தார்.
இதையும் படிங்க: CLASS எடுக்க வாத்தியார் வர்றாரு… பாத்து கத்துக்கோங்க..! திமுகவை விளாசிய அருண் ராஜ்..!