தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இது கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் நடத்தும் முதல் பெரிய பொதுக்கூட்டமாகும். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் நடக்கிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு சந்திப்பும், புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன.
இப்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பொதுக்கூட்ட வடிவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனி விமான மூலம் கோவைக்கு விஜய் சென்றடைந்தார். சாலை மாறும் ஆக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் புறப்பட்டார். பொதுக் கூட்ட இடத்திற்கு சென்றடைந்த விஜய்க்கு செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். உற்சாகத்துடன் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் அருண்ராஜ் உரையாற்றினார்.

அப்போது, அனைத்து சாதி, மதத்தினருக்கும் பொதுவானவர் விஜய் என்று தெரிவித்தார். பதவி, பணம், புகழ் அனைத்தையும் திகட்ட திகட்ட பார்த்தவர் விஜய் என்றும், இவை அனைத்தையும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். செங்கோட்டையன் ஒரு காலத்தில் எம் ஜி ஆர் ரசிகர் என்றும் இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடு மதிக்கும் அளவிற்கு ஆளுமையாக இருக்கிறார் என்றும் இதே போல இந்த கூட்டத்திலிருந்து எத்தனை செங்கோட்டை எண் வரப்போகிறார்கள் என்பதை பாருங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தை ஆளப்போவது ஒரே தளபதி தான்… ஈரோட்டில் விஜய் சந்திப்பில் செங்கோட்டையன் திட்டவட்டம்…!
திமுகவைப் போல கொள்ளையடிக்கும் சுயநல கூட்டமாக மட்டும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார். கிளாஸ் எடுக்க வாத்தியார் வர்றாரு இதை பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பேசினார். வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியையும் விமர்சித்து அருண்ராஜ் பேசினார்.
இதையும் படிங்க: வா தலைவா... கோவைக்கு சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...!