விருதுநகர் அருகே 25 பேர் உயிரிழந்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் ஈஸ்வரியை பட்டம் புதூர் விலக்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசாலையில் கடந்த 19ம் தேதி 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சரவெடி பின்னும் ஒரு அறையில் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. இதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகபடியான வெடிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் ஒரே நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்கபடாததால் வெடி விபத்து நடைபெற்றதாக காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.
இதையும் படிங்க: பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!
கொஞ்சம் கொஞ்சமாக வெடிபொருள் கலவைகளை கலந்து எடுத்து சென்று பட்டாசு தயார் செய்ய வேண்டும் என்று விதிகள் உள்ளன. அது வெடித்தால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்று தெரிந்தே , தங்கள் சுயலாபத்திற்கு அதிகபடியான வெடிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரே நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்கபடாமலும் அதிகபடியான வெடி பொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் வெடிபொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இவ்வழக்கில் ஆலை உரிமையாளர் கோவிந்த நல்லுார் முன்னாள் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி 35, உள் குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். உரிமையாளர் ஈஸ்வரியின் கணவர் முத்துமாணிக்கம் விருதுநகர் உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உள்குத்தகைதாரர் முத்துகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நேற்று கோவையில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!