விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசக்குளம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசகுளம் கீழத்தெருமை பகுதியில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விசாரணையில் அப்பகுதி கீழத்தெருவை சேர்ந்த பொன்னு பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. இந்த வெடி விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை.
இருப்பினும், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததும், அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. ஒருவர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரில் வீழ்த்தப்பட்ட விமானங்கள் எத்தனை? ரகசிய தகவல்களை அறிவித்தார் விமானப்படை தளபதி..