குழந்தை ஒன்று மூச்சு விடும் போது விசில் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. சிறிய குழந்தைகள் குறிப்பாக 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களை வாயில் போட்டுக்கொள்வது மிகவும் இயல்பான நடத்தையாகும். இது அவர்களின் வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இந்தப் பழக்கம் சில சமயங்களில் தீவிர ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பொதுவானவை முதல் உயிருக்கு ஆபத்தானவை வரை நீண்டு செல்லும். மிகச் சிறிய பொருள்கள் குறிப்பாக பொத்தான், நாணயம், சிறிய பிளாஸ்டிக் துண்டு, கல், பேனா கேப், பேட்டரி, சிறிய பொம்மை பாகங்கள் போன்றவற்றைவாயில் சென்று சுவாசப்பாதையை மூடிவிடும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு குழந்தை கடந்த நவம்பரில் தவறுதலாக விசிலை விழுங்கி உள்ளது.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றபோது குழந்தைக்கு உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், விசிலை வெளியில எடுக்காமலேயே அனுப்பி வைத்துள்ளனர். இச்சூழலில், கடந்த ஒரு மாதமாக குழந்தை மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் வரவே, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு மாத காலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்..! பிராட்வே பகுதியில் குவிந்து போராட்டம்..!
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கே 3 மணி நேர முயற்சிக்கு பின் மருத்துவர் குழு விசிலை வெற்றிகரமாக வெளியே எடுத்து சாதனை படைத்தனர். மூன்று மாதமாக குழந்தையின் உடலில் விசில் இருந்தது பெரிய ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்பதே சற்று ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது.
இதையும் படிங்க: வெளுக்க போகுது மழை..! நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் அறிவிப்பு..!