2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியானபோது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கிய மு.க. ஸ்டாலின், தனது கோட்டை என்று கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தோல்வி மட்டுமின்றி, திமுகவின் ஒட்டுமொத்த பின்னடைவும் கட்சியை பலவீனப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இன்று ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கொளத்தூர் தொகுதி ஸ்டாலினுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது. 2008-ல் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அவர் அங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தார்.

குறிப்பாக 2021-ல் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். ஆனால் 2026-ல் நிலைமை மாறியது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாபு 82,997 வாக்குகளும், ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றனர். இது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தோல்வியாக அமைந்தது.
இதையும் படிங்க: என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி எஸ் பாபு கொகொளத்தூர்தொகுதி எம்எல்ஏவாக இன்று பொறுப்பேற்றார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த உடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் உட்பட எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்பேற்றனர். அப்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக வி எஸ் பாபு பதவியேற்றார். உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக முதல்வர் விஜய்யை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!