விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் செல்வம் தன்னுடைய மனைவி சோலையம்மாள் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5-மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இரவு செல்வம் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது கனமழை காரணமாக வீட்டின் நடுவில் இருந்த சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
மேலும் விபத்து ஏற்பட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற காவல் துறையினர் சுவர் இடிபாடுகளில் சிக்கி இருந்த சோலையம்மாளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: உருவாகிறதா புதிய புயல்..? - இன்று கடலில் காத்திருக்கும் பேராபத்து... இந்த 26 மாவட்டங்கள் ‘குறி’...!.
மேலும் இந்த விபத்தில் செல்வத்தின் மகள் முத்துச்செல்வி(17) சம்பவ இடத்தில் பலியான நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான முத்துச்செல்வி மேட்டமலை அருகே உள்ள சின்னக்காமன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “கால் வைத்தாலே காலி...” - கோர முகத்தை காட்டும் வைகை ஆறு... வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!