பருவ மழை தமிழகத்தில் மிக தீவிரமாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், குமரிக்கடலை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்தது.
தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
இதையும் படிங்க: பிரிச்சு நவுத்த போகுது மழை... காற்றழுத்த தாழ்வு நிலையால் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசியில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் 7 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 7 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி, கோவையில் 8ஆம் தேதி கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறி உள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவித்தது. தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ளது.
ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மிகத் தீவிரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ரூ.35,084 கோடி... 5,3445 பேருக்கு வேலை வாய்ப்பு... இன்று கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தம்....!