தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதத்தில் தொடங்கியது. இயல்பை விட மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. பல்வேறு புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மோந்தா புயல் உருவானபோது மழைப்பொழிவு இருந்தது.
அதைத்தொடர்ந்து மழைப்பொழிவு படிப்படியாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் டிசம்பர் தொடக்கத்தில் டிட்வா புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. பெருமளவு பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மழைப்பொழிவு இல்லை. இந்த நிலையில், தென் தமிழகத்தின் மேல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: புஸ்வானமான 'டிட்வா' புயல்..!! தமிழக கடற்கரைக்கு லேட்டா தான் வருமாம்..!! என்ன இப்படி ஆகிடுச்சு..!!
இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைப்பொழிவு உள்ளது. இந்த நிலையில் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்கும் டிட்வா புயல்... ரெட் அலர்ட் வந்துருக்கு... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா...?