திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மடத்துக்குளம் சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான மூர்த்தி அவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டி அகியோரை தேடி வந்தனர்.
இதில் தந்தை மூர்த்தியும், அவரது மற்றொரு மகனான தங்கபாண்டியும் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது என்பது குறித்து விசாரித்துள்ளனர். மறைத்து வைத்திருந்த அந்த ஆயுதத்தை எடுப்பதற்காக உதவி காவல் ஆய்வாளர் சரவண குமார் தலைமையில் மணிகண்டனை உடுமலை அடுத்த குடிமங்கலம் இருக்கக்கூடிய சிக்கனூர் ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே புல்லட் தான்! உயிர் போயிடுச்சு.. என்கவுண்டர் சம்பவம் குறித்த அதிர வைக்கும் தகவல்கள்..!
அங்கே பதுக்கி வைத்திருந்த அரிவாளை கையில் எடுத்த மணிகண்டன் மீண்டும் வந்து காவல்துறையினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் உதவி காவல் ஆய்வாளர் சரவணகுமாருக்கு 2 இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தற்காப்பு நடவடிக்கைகாக மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளது.
ஒரு குண்டு மார்புக்கு கீழ் பாய்ந்திருப்பதாகவும் இன்னொரு குண்டு வந்து முட்டிக்கு மேல் வந்து பாய்ந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. மணிகண்டன் வெட்டியதால் படுகாயம் அடைந்த உதவி காவல் ஆய்வாளர் சரவணகுமார் தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: SSI வழக்கில் நிகழ்ந்த என்கவுண்டர்.. என்ன நடந்தது? மாவட்ட எஸ்.பி நேரில் அதிரடி ஆய்வு..!