திருப்பூரில் மது போதையில் சிறப்பு காவல் ஆய்வாளர் சமூகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சண்முகவேல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SSI வழக்கில் நிகழ்ந்த என்கவுண்டர்.. என்ன நடந்தது? மாவட்ட எஸ்.பி நேரில் அதிரடி ஆய்வு..!
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, கொலையாளிகள் இருவரின் செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றினர். தலைமுறைவாக இருந்த கொலையாளிகள் மூன்று பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், இரண்டு பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.
SSI கொல்லப்பட்ட விவகாரத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் சரணடைந்தனர். மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் தலைமுறைவாக உள்ள நிலையில் நடைபெற்று வந்தன.
சிக்கனூத்து கிராமத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், காயமடைந்த காவலரிடம் திருப்பூர் எஸ் பி யாதவ் க்ரிஷ் அசோக் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, தற்காப்பிற்காக என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தம் ஒரே ஒருமுறை மட்டுமே மணிகண்டனை நோக்கி சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
காவலர்களை மணிகண்டன் அறிவாளன் வெட்டும் முயன்றதால் தற்காப்பிற்காக சுட்டதாக கூறப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தம் சுட்டதில் மணிகண்டனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததும் சீறிப்பாய்ந்த தோட்டா... எஸ்.எஸ்.ஐ. படுகொலையில் என்கவுண்டர் - ஒருவர் பலி