அதிமுகவில் செங்கோட்டையின் கலகக்குரல் எழுப்பியதன் பின்னணி தொடர்பான தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பி இருந்தார். சட்டமன்றத்தில் சீட் கொடுப்பது தொடர்பாக அதாவது செங்கோட்டையனுக்கு சட்டமன்றத்தில் சீட் கொடுப்பது தொடர்பாக இபிஎஸ் ஆலோசித்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இபிஎஸுக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் செங்கோட்டையன் கலககுரல் எழுப்புவதற்கான முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் செங்கோட்டையனுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக இபிஎஸ் ஆலோசித்திருக்கிறார் என்ற ஒரு தகவலும் கிடைத்திருக்கிறது. தமிழக அரசியல் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக செங்கோட்டையனை மையமாக வைத்து சுழன்று வருகிறது. செங்கோட்டையன் என்ன பேசுகின்றார்? செங்கோட்டையன் யாரை சந்திக்கின்றார்? செங்கோட்டையன் எங்கு செல்கிறார்? என்பதுதான் ஒரு பெரிய முக்கியமான செய்தியாக கடந்த சில நாட்களாக இருக்கின்றது. செங்கோட்டையன் அதிமுகவில் கையை உயர்த்தி புரட்சி செய்வதற்கான காரணம் இபிஎஸ் உடன் ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்கசப்பு எனக்கூறப்படுகிறது.
குறிப்பாக வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு சீட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட செங்கோட்டையன் கட்சியிலே புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ந்து அதிமுக தலைமையுடன் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போலத்தான் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தொடர்ந்து தலைமை ஒரு முடிவெடுத்தால் இவர் வேறு விதமான முடிவெடுப்பதாகவும் அதேபோல சட்டமன்றத்திலே எதிர்கட்சி தலைவர் அறைக்கு கூட வராமல் சபாநாயகர் அறை வழியாக சென்று சபாநாயகர் எந்த வழியில் வெளியேறுவாரோ அந்த வழியிலே வெளியேறுவதுமாகத்தான் அவர் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆமாம்... இதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன்! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
எதிர்கட்சி நடத்தக்கூடிய கூட்டங்களுக்கோ அல்லது எதிர்கட்சி தலைவரை சென்று சந்திப்பதோ முற்றிலுமாக தவிர்த்து வந்தார். அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது போன்றவற்றில் கலந்து கொண்டாலும் கூட அவர் இபிஎஸை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். குறிப்பாக கட்சி நிர்வாகிகள் திருமணங்கள் நடைபெற்றால் கூட இபிஎஸ் அந்த திருமணத்திற்கு 6 மணிக்கு வருகிறார் என்றால், இவர் நாலு மணிக்கே அந்த திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு புறப்பட்டு வந்துவிடுவாராம். உதாரணத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியினுடைய மகன் திருமணத்தில் கூட இதே போன்றுதான் செங்கோட்டையின் முன்கூட்டியே சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, சென்றுவிட்டார்.
இதுபோன்ற செங்கோட்டையனின் செயல்களை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருவதாக கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் சிலர் தகவலாக சொல்கின்றார்கள். அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையிலே அவர் கட்சியை தொடர்ந்து நல்ல வளர்ப்பதற்கு பதிலாக பல நிர்வாகிகள் சோர்வடைவதற்கு காரணமாக இருந்துவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டையும் இபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து ஈரோடு அல்லது ஈரோடு ஒட்டிய பகுதிகளிலிருந்து பல மூத்த நிர்வாகிகள் வெளியேறியதற்கு முக்கிய காரணமே செங்கோட்டையன் தான் என்றும் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 15, 20 நிர்வாகிகளுடைய பெயர்களை குறிப்பிட்டு இந்த நிர்வாகிகள் எல்லாம் தற்போது ஆதிமுகாவிலே இல்லை. இவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் அதிமுகவில் இருந்தவர்கள். இன்றைக்கு திமுகவிலோ அல்லது வேறு பல கட்சிகளுக்கோ சென்றதற்கு காரணம் செங்கோட்டையன் தான் காரணம் என்று அந்த காரணங்களை இபிஎஸ் தரப்பிலிருந்து அடுக்குகிறார்கள். எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2026ல் உறுதியாக செங்கோட்டையனுக்கு சீட்டு கிடையாது என்ற தகவல் பேசப்பட்டிருக்கிறது. அந்த தகவல் செங்கோட்டையனுக்கும் தெரிந்திருக்கிறது. எப்படியும் கட்சிக்குள் இருந்தால் தனக்கு சீட்டு கிடையாது என்று உறுதியாகிவிட்ட நிலையில் வெளியிலிருந்து யாரெல்லாம் புரட்சி செய்கிறார்களோ, யாரெல்லாம் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடன் செங்கோட்டையின் கைகோர்த்திருப்பதாக தெரிகின்றது.
உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் வெற்றி பெற்றாலும் கூட, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஆனால் அவருடைய மறைவிக்கு பிறகு 2017ல் சசிகலா அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் செங்கோட்டையனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பை கொடுக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக தேர்வு செய்த அதே நாளில்தான் சில புதிய அமைச்சர்களும் உள்ளே கொண்டு வருகிறார்கள். அதிலே செங்கோட்டையனையும் பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளே கொண்டு வருகிறார்கள். எனவே தனக்கு சசிகலா மற்றும் அந்த டீம் உள்ளே வந்தால் அந்த குழுவினர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் தனக்கு உதவி செய்வார்கள். தன்னுடைய அரசியல் எதிர்காலம் மீண்டும் துளிர்க்கும் என்று கருதுகிறார்.
அதனால் தான் தற்போது இபிஎஸ் அணியிலிருந்து விலகி மற்ற அணிகளில் அவர் சேர்வதற்காக காய்களை நகர்த்துவதாகவும் சொல்லப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவுக்கும் செங்கோட்டைனுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நல்ல நட்புறவு இருந்து வருவதாக சொல்கின்றார்கள். கொடநாடு பங்களா வாங்கிய காலத்திலிருந்தே செங்கோட்டையன் அவர்களுடைய உதவி என்பது அவர்களுக்கு இருந்திருக்கிறது. பல விஷயங்களிலே அவர்கள் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே இபிஎஸ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அதேபோல சசிகலாவுடன் இருக்கக்கூடிய பழைய நட்பையும் புதுப்பிக்க கூடிய வகையிலே தான் இந்த சண்டை சச்சரவு புரட்சி போன்றவை எல்லாம் நடைபெறுவதாக அதிமுகவில் உள்விவரம் அறிந்தவர்கள் தகவலாக சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: கடைசி அழைப்பு... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க ஆரம்பித்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... அதிமுகவில் பூகம்பம்...!