வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராமாபாய் நகர்ப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சாலை சாத்கர், கள்ளிச்சேரி, கோட்டைச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக ஒரு மதுபானக் கடை திறக்கப்படுவதற்காக கடை ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் மதுபானக் கடை அமையவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிகள் அருகே மதுபான கடைகள்.. தவெக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரணாம்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுபான கடை அமைப்பதற்கு தடை விதிக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: TASMAC ஊழல்.. கருப்பு சட்டை, கருப்பு கொடியுடன் பாஜக-வினர் ஆர்பாட்டம்..!