• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல் அநாகரீகம் அண்ணாமலை.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு.. செந்தில் பாலாஜி, விஜய்க்கு சப்போர்ட்..!

    பிரச்சினைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா ? என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Tue, 18 Mar 2025 14:11:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-condemned-by-selvapperunthakai

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; அமலாக்கத்துறையின் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையை தடையை மீறி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி ஊழல் என்று மார்ச் 12 ஆம் தேதி ஊடகங்களின் மூலமாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். அடுத்த நாள் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில் எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. அந்த வழக்கு விவரங்கள் என்ன ? எந்த ஆண்டுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன என்ற விவரத்தை அறிவிக்காமலேயே டாஸ்மாக்கில் பணியாற்றுகிற கடைநிலை ஊழியர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த குற்றச்சாட்டை கட்டமைத்துள்ளது. டாஸ்மாக்கில் பணியாற்றகிற கடைநிலை ஊழியர் செய்கிற தவறுக்கு அத்துறையின் அமைச்சரை எப்படி பொறுப்பாக்க முடியும்?

    Annamalai 

    கடந்த டிசம்பர் 2023 இல் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் டாக்டரிடம் முதல் தவணையாக ரூபாய் 20 லட்சம் லஞ்சமாக பெற்று கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரி செய்த குற்றத்திற்கு அத்துறையின் அமைச்சரான நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றாரா ? ஊருக்கு உபதேசம் செய்யும் அண்ணாமலை இதற்கு பதில் கூறுவாரா ? எனவே, இதுவொரு அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.  

    ஏற்கனவே அமலாக்கத்துறையின் அவதூறு குற்றச்சாட்டின் பேரில் 15 மாதங்கள் சிறையில் இருந்து, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு, வெளியே வந்திருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, மீண்டும் குறிவைத்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் முன் நிரூபிப்பேன் என்று தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார். 

    இதையும் படிங்க: பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை, தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து.. பாஜக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா..?

    Annamalai

    தேசிய அளவில் பா.ஜ.க., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக் கொண்டு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை பா.ஜ.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த 97 சதவிகித வழக்குகளில் 2 சதவிகிதம் தான் தண்டனை பெறப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் அமலாக்கத்துறை செயல்படுகிறதே தவிர, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    Annamalai

    இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த  பா.ஜ.க.வுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாக, சென்னையில் போராட்டம் நடத்த வேண்டுமென்றால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம் என சில குறிப்பிட்ட இடங்களில் தான் அனுமதி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் ஊர்வலங்களுக்கு கூட சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

    தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யபபட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதிக் கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சினைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துவாரா?

    Annamalai

    அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.

    Annamalai

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்தியா கூட்டணி 2019 மக்களவை தேர்தலில் இருந்து கட்டுக்கோப்புடன் கொள்கை உறுதியோடு செயல்பட்டு அனைத்து தேர்தல்களிலும் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று வருகிறது.

    இந்நிலையில் பா.ஜ.க.வுடன் சேருவதற்கு தமிழகத்தில் எந்த கட்சியும் முன்வராத நிலையில் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு நாள்தோறும் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தை பா.ஜ.க. பக்கம் ஈர்ப்பதற்கு அதன் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமித்ஷாவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் கள நிலவரத்தை அறிந்த விஜய், நேற்று பா.ஜ.க.வின் டாஸ்மாக் போராட்டத்தை கடுமையான முறையில், மிகமிகத் தரம் தாழ்ந்து இழிவாக விமர்சனம் செய்திருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தின் அரசியல் அநாகரீகமாக அண்ணாமலை மாறி வருகிறார்.

    Annamalai

    மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2005 இல் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கான ரூபாய் 2118 கோடி நிதி தராமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதினார்.

    இதனால், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஐந்து மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு  ஊதியம் தர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கடுகளவாவது அக்கறை இருந்தால், ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை பெற்றுத் தர அண்ணாமலை முயற்சி செய்வாரா?

    Annamalai

    தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிய அரசின் நிதி பங்கீடு 2016-17 இல் 3.41 சதவிகிதமாக இருந்தது, 2024-25 இல் நிதி ஒதுக்கீடு 1.96 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவிகிதத்தையும், மொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் பெற்றிருக்கிற தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9.21 சதவிகிதப் பங்கை அளிக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிகளின் மூலமாக வழங்குகிற பங்கு வெறும் 4 சதவிகிதம் தான். 

    Annamalai

    தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால், அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சிகளின் காரணமாக அடிக்கடிப் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது என செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாபக்கேடு... 'டூப்' போலீஸ் அண்ணாமலை- வறுத்தெடுத்த சேகர்பாபு..!

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share