சத்தீஸ்வர் புஜாரா 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவரது திடமான பேட்டிங் நுட்பம், பொறுமையான ஆட்டம், மற்றும் நீண்ட நேரம் களத்தில் நின்று ரன்களைக் குவிக்கும் திறன் ஆகியவை அவரை இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய உறுப்பினராக மாற்றின. 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா, 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 7,195 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் முக்கிய வீரராக அவர் பல ஆண்டுகள் பங்காற்றினார், குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஹிந்தி வர்ணனையாளராக புஜாரா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2018-19 டெஸ்ட் தொடரில் அவரது மூன்று சதங்கள் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.இருப்பினும், 2023ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு புஜாரா இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவரது பேட்டிங் ஃபார்ம் சற்று தடுமாறியதாகக் கருதப்பட்டதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்ததும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் கன்ஃபார்ம்.. கேரளாவுக்கு எப்போ வராரு தெரியுமா..??
டெஸ்ட் போட்டிகளை மட்டும் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் வீரர் பூஜா ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி பணம் கட்டி விளையாட்டா..!! நெவர்.. அதிரடி முடிவு எடுத்த ட்ரீம் 11..!!