இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஓராண்டாக அவர் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி வருகிறார். சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான ஸ்கோர்களை எடுத்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடரில் அவர் மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டு, ஐந்தாவது போட்டியில் இருந்து அவராகவே அணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஒரு தேசிய அணியின் கேப்டனாக இருப்பவர் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மனநிலையிலோ, ஓய்வெடுக்கும் மனநிலையில் இருக்கக் கூடாது. இது குறித்து முடிவு எடுப்பது ரோகித் சர்மாவின் கையில் தான் உள்ளது.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்.. முதல் போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.!!

அவர்தான் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும். அவர் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், நான் இந்திய அணியின் கேப்டனாகவும், இந்தியாவுக்காக விளையாடவும் வேண்டுமா? நான் அதற்கான அர்ப்பணிப்பை அளிக்க தயாராக இருக்கிறேனா? அதற்கான போதுமான நேரம் மற்றும் முயற்சிகளைச் செலுத்துகிறனா? என கேள்விகளைக் கேட்க வேண்டும்.

உங்கள் நாட்டுக்காக விளையாடுவது என்பது கௌரவம் மற்றும் மரியாதையாகும். உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது, நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மனநிறைவுடனும், ஓய்வெடுக்கும் மனநிலையில் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயதாகும் நிலையில், அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொஞ்சம் அசந்தா அவ்வளவுதான்... தோனியை பற்றி புட்டு புட்டு வைத்த ரோஹித் சர்மா!!