இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தோனிக்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகளை வென்று தந்த இந்திய கேப்டன் என்ற பெருமை, ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை, ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா.

இந்நிலையில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மாவை கௌரவிக்கும் விதமாக அவரது பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டாண்ட் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ், என்.சி.பி-எஸ்.சி.பி தலைவர் சரத் பவார், மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், ரோஹித் ஷர்மாவின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஸ்டாண்டை திறந்து வைத்தனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்.. முதல் போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.!!

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரோஹித், இந்த நிகழ்வு நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை, சிறு வயதில் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இதை யாரும் யோசிப்பதில்லை என்றார். மேலும் ஸ்டாண்டின் படத்தைக் கொண்ட ஒரு தகடு ரோஹித் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

ரோஹித் ஷர்மா எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர், 499 சர்வதேச போட்டிகளில் 49 சதங்கள், 108 அரை சதங்கள் மற்றும் 264 சிறந்த ஸ்கோருடன் 42.18 சராசரியுடன் 19700 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை அடித்துள்ளார். இது ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும் அவரது 246 ரன்கள் ஒருநாள் வரலாற்றில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும்.

மேலும் ரோகித் சர்மாவுக்கு சூரியகுமார் யாதவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டனாக விளங்கும் ரோகித் சர்மா பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக அவர் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட்டில் விளையாடியிருக்கலாம்.. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம்.!!