2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த டாஸ் குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், முதலில் நாங்கள் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம். ஏனென்றால் ஜெய்ப்பூரில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. மேலும் ஆடுகளமும் இரவு நேரத்தில் தன்மையாக மாறிவிடும். எனவே அதில் பேட்டிங் செய்வது சிறப்பானதாக அமையும். நாங்கள் வெற்றி பெறுகிறோமோ இல்லை தோல்வியை தழுவுகிறோமோ போட்டியை எப்போதுமே சிம்பிளாக தான் வைத்திருக்கிறோம்.

இதைத்தான் எங்கள் பயிற்சியாளர் தெளிவாக சொல்லி இருக்கின்றார். இன்னும் மூன்று போட்டிகள் இருக்கின்றது. நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்று அணுகி வருகின்றோம். எங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினால் நிச்சயமாக நாங்கள் ஒரு நல்ல அணியாக விளங்குவோம். நாங்கள் எங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கின்றோம். இன்று எங்கள் அணிகளில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அசரங்காவிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக குமார் கார்த்திகேயா வந்திருக்கிறார். இதேபோன்று சந்திப் சர்மாவுக்கு கைவிரல் உடைந்து இருக்கிறது.
இதையும் படிங்க: தொடரில் இருந்து வெளியேற்றம்; சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே சோலியை முடிச்ச பஞ்சாப் அணி!!

இதனால், அவருக்கு பதில் ஆகாஷ் மதுவால் களமிறங்குகிறார் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்களும் முதலில் பந்து வீசும் தான் முடிவு எடுத்திருந்தோம். மேலும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெற்றியை பெற முயற்சி செய்வோம் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி முன்னேற்றத்தை காண வேண்டும் என்பது குறித்து நாங்கள் அணியில் பேசி வருகின்றோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லைம் பயமின்றி களத்தில் விளையாட வேண்டும்.

தோற்றுவிடுவோம் என்ற பயம் கொஞ்சம் கூட வரக்கூடாது. இதை போல் ஆடுகளத்தை பற்றி தெரிந்து கொண்டு விரைவாக அதற்கு ஏற்றார் போல் ரன் குவிக்க வேண்டும். நீங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். பின்னர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ரியான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்களிலும் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தது மும்பை அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பேட்டிங்கில் சொதப்பிய DC... 14 ரன்கள் வித்தியாசத்தில் KKR வெற்றி!!