சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த சூழலில் விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ''டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூவை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் நான் சுமக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

இதையும் படிங்க: இந்திய அணி விளையாடும் 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களா? பிசிசிஐ-க்கு வந்த புதிய தலைவலி!!
வெள்ளை நிறத்தில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று இருக்கிறது. அமைதியான ஆட்டம், நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத சிறிய தருணங்கள் ஆனால் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
நான் இந்த வடிவத்திலிருந்து விலகும்போது, அது எளிதானது அல்ல - ஆனால் அது சரியானதாக உணர்கிறது. நான் என்னிடம் இருந்த அனைத்தையும் அதற்குக் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்குத் திருப்பித் தந்துள்ளது.

விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, வழியில் என்னைப் பார்த்ததாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்.#269, சைனிங் ஆஃப்'' எனப் பதிவிட்டுள்ளார். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன். #269, சைனிங் ஆஃப்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா... அடுத்த கேப்டன் யார்?