அபுதாபியில் நடைபெற்று வரும் IPL 2026 சீசனுக்கான மினி ஏலம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ரூ.43.40 கோடி கையிருப்புடன் வலுவாக களமிறங்கியுள்ளது. CSK உடன் KKR அணியும் அதிக பட்ஜெட்டுடன் போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஏல அரங்கில் CSK அணியின் டேபிளில் அமர்ந்திருக்கும் ஒரு பெண், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார். அந்த பெண் யார்? CSK அணிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்.

வழக்கம்போல், CSK அணியின் ஏல டேபிளில் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், அனலிஸ்ட் ஏஆர் ஸ்ரீகாந்த் மற்றும் CEO காசி விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இம்முறை முதல்முறையாக ஒரு பெண்ணும் அவர்களுடன் அமர்ந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 18 IPL சீசன்களில் இதுபோன்று பெண் நிர்வாகி CSK ஏலத்தில் பங்கேற்கவில்லை என்பதால், சமூக வலைதளங்களில் "அந்த பெண் யார்?" என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு..!! KKR முன்னாள் வீரர் ஆண்ட்ரே ரசல் ஷாக் அறிவிப்பு..!!
அந்த பெண் வேறு யாருமல்ல... CSK அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தான். கடந்த இரண்டு சீசன்களாகவே ரூபா, CSK அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். அணியின் முதலீடுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். சமீபத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டை CSK கேப்டனாக நியமித்ததற்கு பின்னணியில் ரூபாவின் செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற SA20 லீக் ஏலத்திலும் ரூபா டேபிளில் அமர்ந்து பங்கேற்றார். இப்போது IPL மினி ஏலத்திலும் அவர் உரிமையாளராக கலந்துகொண்டுள்ளது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விற்ற பிறகு, CSK அணியை முழுமையாக கட்டுப்படுத்தும் நிர்வாகியாக ரூபா உருமாறியுள்ளார். அத்துடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.

இந்த ஏலத்தில் CSK எந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், ரூபாவின் இருப்பு, அணியின் உத்திகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். CSK அணி, வழக்கம்போல் மிக்சர், பாதாம் பருப்பு போன்ற ஸ்னாக்ஸ்களுடன் ஏலத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம், IPLயின் பாலின சமநிலையை பிரதிபலிக்கிறதா என்பது காலம் பதிலளிக்கும்.
இதையும் படிங்க: 2026 IPL-ல் இருந்து விலகும் டு பிளெசிஸ்..!! ரசிகர்கள் ஷாக்..!! காரணம் இதுதானாம்..!!