இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் வலுவான போட்டியை ஏற்படுத்தும் வகையில் லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் சீரிஸ் மாடலான லாவா ஸ்மார்ட் 4 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வசதிகளுடன், இளைஞர்கள் மற்றும் முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 6.75 இன்ச் அளவிலான பெரிய HD+ டிஸ்ப்ளேவுடன் 720x1600 பிக்சல் தெளிவுத்திறனையும், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்-ஐயும் கொண்டுள்ளது. இதனால் ஸ்க்ரோலிங், வீடியோ பார்க்கும் அனுபவம் மிகவும் சீராகவும் மென்மையாகவும் இருக்கும். செயல்திறனுக்கு UNISOC 9863A ஆக்டா-கோர் பிராசஸர் (28nm) மற்றும் PowerVR GE8322 GPU ஆதரவு அளிக்கின்றன. 4 ஜிபி ரேம் உடன் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி இருப்பதால் மல்டி டாஸ்கிங் சுலபமாகும்.
64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு இடத்தை மெமரி கார்டு மூலம் மேலும் நீட்டிக்கலாம். ஆண்ட்ராய்டு 15 Go Edition இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன், லேசான மற்றும் வேகமான அனுபவத்தை வழங்குகிறது. புகைப்பட ஆர்வலர்களுக்கு 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா AI உதவியுடன் HDR, போர்ட்ரெய்ட் மற்றும் நைட் மோட் வசதிகளை வழங்குகிறது. 5 மெகாபிக்சல் செல்பி கேமரா தெளிவான வீடியோ கால்கள் மற்றும் செல்பிகளுக்கு உதவுகிறது.
இதையும் படிங்க: லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

LED ஃபிளாஷ் உடன் வரும் கேமரா அமைப்பு குறைந்த ஒளியிலும் சிறப்பாக செயல்படும்.பாதுகாப்புக்கு பக்கவாட்டில் உள்ள கைரேகை சென்சார், 5000mAh பெரிய பேட்டரி 10 வாட் சார்ஜிங் ஆதரவுடன் நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்கிறது. டூயல் 4G VoLTE, வைஃபை, ப்ளூடூத் 4.2, USB Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோ உள்ளிட்ட இணைப்பு வசதிகள் முழுமையாக உள்ளன.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை: நீலகிரி ப்ளூ மற்றும் ஹிமாலயன் சில்வர் ஆகிய இரு அழகிய நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 மட்டுமே. ஒரு வருட உத்தரவாதம் மற்றும் வீட்டுக்கு வரும் இலவச சர்வீஸ் வசதியும் வழங்கப்படுகிறது.லாவா நிறுவனம் இந்த மாடல் மூலம் தரமான அம்சங்களை மிகக் குறைந்த விலையில் வழங்கி, இந்திய சந்தையில் தனது பங்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!