மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கும் டொவினோ தாமஸ், தனது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு மற்றும் ஆளுமை மிக்க நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். 2012-ல் ‘பிரபுவின்டே மகன்’ படம் மூலம் துணை நடிகராக அறிமுகமானார். பின்னர், ‘மாயநதி’, ‘மின்னல் முரளி’, ‘தள்ளுமால’, ‘2018’ உள்ளிட்ட படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

குறிப்பாக, ‘2018’ திரைப்படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது, இவரது நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. தமிழில் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். 2024-ல் வெளியான ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ARM) படம் உலகளவில் 100 கோடி வசூலித்து பெரும் வெற்றி பெற்றது, இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உடன் இணைந்து மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார்.
இதையும் படிங்க: பரபரப்பு பணமோசடி புகார்.. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!!
‘நடிகர்’ படத்தின் டிரைலர், சூப்பர் ஸ்டாராக உயரும் ஒரு இளைஞனின் கதையாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. டொவினோ தனது நடிப்பு மட்டுமல்லாமல், மனிதநேயத்திற்காகவும் பாராட்டப்பட்டவர். 2018 கேரள வெள்ளத்தில் மக்களுக்கு உதவியதற்காக ‘ரியல் ஹீரோ’ என அழைக்கப்பட்டார்.
சமீபத்தில், மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், “குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அவசியம்; அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்” என வலியுறுத்தினார். மற்ற மொழி படங்களில் நடிக்காமல் மலையாள சினிமாவில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ‘நடிகர்’, ‘அதிர்ஷ்ய ஜாலங்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் டொவினோ, தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் டொவினோ தாமஸ், ‘நரிவேட்டை’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக செப்டிமஸ் விருது விழாவில் ‘சிறந்த ஆசிய நடிகர்’ விருதை வென்றுள்ளார். இந்த விருது, ஆசிய சினிமாவில் சிறந்த நடிப்பை அங்கீகரிக்கும் முக்கியமான பரிசாகக் கருதப்படுகிறது.
https://www.instagram.com/p/DON6ot7Ed4Q/?utm_source=ig_embed&ig_rid=95c1e954-faa5-4cd2-9f91-4c225e081ff7
அனுராஜ் மனோகர் இயக்கிய 'நரி வேட்டை' என்ற படத்தில் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும்.
மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. "நரிவேட்டை" படம் கடந்த மே 23ம் தேதி வெளியானது. இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 11 ம் தேதி வெளியானது.

இந்நிலையில், மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்றுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலகளவில் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. இவ்விருதை 2வது முறையாக பெறுகிறார் டொவினோ. டொவினோ தாமஸ் ‘2018’ படத்திற்காகவும் இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் உருவெடுத்த 'GBU' காப்பிரைட்ஸ் விவகாரம்.. கோர்ட்டுக்கு போன இளையராஜா..!!