தமிழ் சினிமாவில், குறிப்பாக காதல் கதைகளில் மென்மையான நடிப்பின் வழியாக ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை கவுரி கிஷன், தற்போது தனது திரையுலகப் பயணத்தில் ஒரு புதிய முன்னேற்றத்துக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நான் காதல் கதைகளில் மட்டும் இல்லை, கதாநாயகியாகவும் மாறக்கூடியவர் தான்’ என்பதை நிரூபிக்க, கடந்த சில வாரங்களாக அவரது செயல்பாடுகள் திரையுலக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
கவுரி கிஷன் என்ற பெயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதன்முதலில் அறிமுகமானது, 2018-ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தின் மூலமாக தான். விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் காதல் சோகத்தோடு கலந்த அந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இளம் வயது ஜானுவாக நடித்த கவுரி, அத்துடன் நெகிழ்ச்சியான பார்வை, எளிமையான தோற்றம் மற்றும் நியாயமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் வெளியாகியதும், "இந்த பெண்ணுக்கு மிகுந்த எதிர்காலம் இருக்கிறது" என்றெல்லாம் பலர் பாராட்டியிருந்தனர். ஆனால் '96' பட வெற்றிக்கு பிறகு, கவுரி கிஷன் ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’, ‘‘ஹாட் ஸ்பாட்’, ‘போட்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், இவை பெரும்பாலும் துணை வேடங்கள் அல்லது கேம் சேஞ்சர் அல்லாத கதாபாத்திரங்களாகவே அமைந்தன. "எதற்காக இவ்வளவு திறமையான நடிகைக்கு முக்கியமான ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை?" என்ற கேள்வி திரை விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் எழ ஆரம்பித்தது. ஒரு பகுதி விமர்சகர்கள் இதற்கான காரணமாக, கவுரியின் கவர்ச்சிக்கு எதிரான நெருக்கடியான பிம்பத்தைத்தான் காரணமாக கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து எளிமையான, பாசித்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்ததால், சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரை காமர்ஷியல் ஹீரோயின் என பார்க்கவில்லை என்பது பரவலான கருத்தாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கவுரி கிஷன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தையும், அதேசமயம் வியப்பையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மறைந்த நடிகர் ரோபோ சங்கர்..! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!

அண்மையில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும், அவரது இமிஜை முற்றிலும் மாற்றும் வகையில் இருந்தன. ஸ்டைலான உடைகள், லேசான கவர்ச்சி, மாடர்ன் மேக்-ஓவர், போஸ்டுகளுக்கு பின்னான சென்சுவல் ஏலுமைகள் என இவை அனைத்தும், "கவுரி கிஷன் கவர்ச்சியில் இறங்கப் போகிறாரா?", "பட வாய்ப்புகளுக்காக அவர் தனது பாணியை மாற்றுகிறாரா?" என்ற கேள்விகளை எழுப்புகிறது. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பழமொழி போலப் பட்டாலும், தற்போது திரையுலகத்தில் ‘யார் ஃபிட் ஆர் மார்க்கெட், யார் கவர்ச்சி காட்டிறாங்க, யார் கிளாமர் ரோலுக்கு தயாரா இருக்காங்க’ என்பது தணிக்கை செய்யப்படும் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது.
அதனை உணர்ந்தது போலவே, கவுரி தனது வெளிப்பாட்டை மெல்ல மெல்ல மாற்ற ஆரம்பித்துள்ளார். இப்படி இருக்க இந்த மாற்றம் திட்டமிட்ட ஒன்றா?, தனக்குள்ள ஒரு மாற்றமா? அல்லது மார்க்கெட் தேவை எனும் ரீதியிலா? என்பது வெறும் அவர் மட்டுமே சொல்லக்கூடிய விஷயம். இந்த மாற்றத்தைப் பற்றி ரசிகர்களின் கருத்துகள் இருவகைப்படி இருகின்றன. கவுரியின் இந்த மெல்லிய மேக்-ஓவர் போஸ்டுகள், விரைவில் அவருக்கு புதிய வகையான கேரக்டர்கள், அசாதாரண ஹீரோயின் வேடங்கள், ஓடிடி பிளாட்ஃபாம்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் போன்றவற்றை உருவாக்க வாய்ப்பு அளிக்கலாம். இந்த இடத்தில் கவுரியின் நடிப்பு திறன் அவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்றே கூற வேண்டும்.

ஏனெனில், அவரது ‘96’ மற்றும் ‘அடியே’ போன்ற படங்களில் அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, அழுத்தமான பார்வை – இவை அனைத்தும் ஒரு கதாநாயகிக்கு தேவையான அடிப்படைத் திறன்கள். இப்போது அதனுடன் கிளாமர் என்று கூட்டு சேர்த்தால், அது ஒரு கூடிய மதிப்பை தரக்கூடிய முயற்சியாகவே அமையும்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் வீட்டு மொட்டைமாடியில் ஹாயாக அமர்ந்திருந்த இளைஞர்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..!