கோலிவுட்டில் ரஜினி காந்த், மோகன்லால், மம்முட்டி, மகேஷ் பாபு, பவன் கல்யாண் என பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் என பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். அவர்கள் வரிசையில் நட்சத்திர சூப்பர் ஸ்டாராக மக்கள் மத்தியில் வளம் வருபவர் தான் நடிகர் அமீர் கான். இவரது புருவ அசைவே பலரையும் நடுங்க வைக்கும்.. ஆனால் இவர் சிரித்தால் அனைவர் முகத்திலும் புன்னகை மலரும் அப்படி பட்டவர் தான் இந்த அமீர் கான்.

1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்கான். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும்.
இதையும் படிங்க: நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஸ்டார் அமீர் கான்..! ஷாக்கில் ரசிகர்கள்..!

அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது. இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன.

இப்படி இருக்க, 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் படமாக தற்பொழுது அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.எஸ் பிரசன்னா, முழுக்க முழுக்க நடிகர் அமீர் கானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா முன்னணி கதாபார்த்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பலரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள இப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இப்படம் தற்பொழுது மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில், நடிகர் அமீர்கான் தனது மனைவி குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் பேசுகையில், "தனது முதல் மனைவியான ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி சென்றார். அவர் என்னை விட்டு பிரிந்து சென்ற அன்று என்னால் அந்த வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அன்று முதல்முறையாக ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன் பின் தொடர்ந்து ஒன்றரை வருடம் அவரை மறக்க முடியாமல் தினமும் மது குடித்தேன். என்னால் சரியாக தூங்கவும் முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவையும் இழந்தேன். பேசாமல் என் உயிரை நானே மாய்த்துக் கொள்ளலாம் என முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், என்ன அமீர்கான் சொல்லுறீங்க? தற்கொலை செய்ய முயற்சித்தீர்களா..? என வியப்புடன் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனது அப்பாவுடன் சண்டை.. வீட்டைவிட்டு வெளியேறிய நடிகர் விஜய்..! பரபரப்பு பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!