தமிழ் சினிமாவில் தனித்துவமான குரல், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மற்றும் தன்னம்பிக்கையான திரைபிம்பம் ஆகியவற்றால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றிருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, மீண்டும் தனது புதிய புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட கலைப்பணிகள் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: 48 வயதில் அப்பா போஸ்டிங்..!! 2வது திருமணத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா வீட்டில் வந்த பெண் தேவதை..!

நீல நிற டாப் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து எளிமையான அதே நேரத்தில் நவீன ஃபேஷன் தோற்றத்தில் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

வழக்கமான கிளாமர் புகைப்படங்களை விட, அதிக மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் ஆண்ட்ரியா காட்சியளித்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியாவின் பயணம் வழக்கமான கதாநாயகிகளின் பயணத்தைப் போன்றதல்ல.
இதையும் படிங்க: ‘மகுடம்’ படத்தின் First single இன்று ரிலீஸ்..!! நடிகர் விஷால் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!