எந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் அதனை பற்றி கவலை படவே வேண்டாம் அங்கு அரசியல் தலையீடு இருந்தால் போதும் அந்த படம் மாஸ் ஹிட் கொடுக்கும். கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்த்தால் நடிகர் விஜயின் படங்கள் வந்தாலே ஒருதரப்பு அரசியல் கட்சியினர் பிரச்சனைக்கு இறங்குவர் அந்த படமும் ஹிட் கொடுக்கும்.
அதே போல் சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் ராட்சசி படத்தில் "இவங்க தான் வரணும் இவங்க தான் வரக்கூடாது என சொல்ல இது என்ன கோவில் கர்ப்ப கிரகமா" என சொல்லிட்டார் என்று பெரிய பஞ்சாயத்தையே செய்து படத்தை ஓட வைத்தனர் அரசியல் கட்சியினர்.

இப்படி எந்த படங்களை எடுத்தாலும் அந்த படத்தை ப்ரமோஷன் செய்ய எந்த அளவிற்கு சமூக வலைதளம் உதவுகிறதோ அதே அளவிற்கு அரசியல் கட்சினரும் உதவி செய்து தான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் தீபிகா படுகோனே உடையை சொல்லி ஒரு பிரச்சனை செய்து படத்தை பார்க்க ஒரு கூட்டம் வந்தது. அதே போல் தான் 'எல்2எம்பூரான்' படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் மதவாத சண்டையை இந்த படம் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் சில அமைப்புகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

அதன் படி, எம்புரான் படத்தின் தொடக்கத்தில் 'வில்லன் பால்ராஜ்' இஸ்லாமிய குடும்பத்தை கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு வில்லன் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. மத பிரச்னையை தூண்டும் விதமாக இப்படத்தின் பல காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், 24 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கினர்.

இப்படியான சூழலில் எந்த படம் எடுத்தாலும் படம் வெளியாவதற்குள் ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. இப்படி இருக்க, எனக்கு உதயநிதி ஸ்டாலினும் நண்பர்தான் அவர் கூப்பிட்டால் ஒரு சில காரியங்கள் எனக்கு செட் ஆனால் கண்டிப்பாக அவருக்காக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் நேற்று தெரிவித்தார். தெரிவித்த மறுகனமே அவருடைய படத்தின் மீது பாஜகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என நடிகர் சந்தானம் மீதும் மே 16ம் தேதி வெளியாகவுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் மீதும் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..!