‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, சார்ப்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் கலையரசன். தஅவரது இயற்கையான நடிப்பு, சமூகக் கோணங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் திறமை என அனைத்தும் கலையரசனை ஒரு வித்தியாசமான நடிகராகவே தமிழ் சினிமா கட்டமைத்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் கலையரசன் நடித்துள்ள ‘ட்ரெண்டிங்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போது, கலையரசன் மிக முக்கியமான, மற்றும் அதிர்ச்சி தரும் சிக்கலான உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.. என்னவெனில், தமிழ் சினிமாவில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு உள்ளது என தெரிவித்தது தான் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ‘ட்ரெண்டிங்’ விழாவில் கலையரசன் பேசுகையில், " தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.. அது மிகவும் மோசமான அளவில் சினிமாவில் உள்ளது.
நானே அதை பலமுறை நேரடியாக அனுபவித்து இருக்கிறேன். நான் இயக்குனர் ரஞ்சித் உடன் நெருக்கமாக இருப்பதால், பலரும் என்னை நடிக்க அழைக்க யோசிக்கிறார்கள். சில நேரங்களில் நான் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், எனது பின்னணி காரணமாக அது கைவிடப்படுகிறது. இது தான் தற்பொழுது சினிமாவின் உண்மையான நிலை" என மிகவும் உருக்கமாக தெரிவித்தார். இப்படி இருக்க, நடிகர் கலையரசன், இயக்குநர் பா.ரஞ்சித் உடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறித்து அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அட்டகத்தி படத்தின் மூலம் இருவரும் திரையுலகத்தில் கால்பதித்து, அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, சார்ப்பட்டா பரம்பரை போன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இது ஒரு வகையில் இருவருக்கும் இடையே உருவான நம்பிக்கையையும், சிந்தனையோட்ட ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. ஆனால், கலையரசனின் விளக்கப்படி, இந்த நெருக்கம் சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவரை தவிர்க்கும் காரணமாகவும் மாறியுள்ளது என்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பேட்டிகளில் "நான் எதையும் செய்வதற்கு முன் ரஞ்சித்திடம் கேட்பேன்" என நடிகர் கலையரசன் அவ்வப்போது பேசுவது இருவரின் நெருக்கமான நட்பை பிரதிபலிக்கிறதாக உள்ளது. இதனால் தான் தற்பொழுது கலையரசன் வெளிப்படையாக கூறிய “ஜாதி இன்னும் தமிழ்ச் சினிமாவில் உள்ளது” என்ற கருத்து, தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து உள்ளே நுழைய முயற்சி..! பிரபல கவர்ச்சி நடிகை நபா நடேஷ் கலக்கல் பேச்சு..!
ஆனாலும் இதனை பலரும் உண்மைதான் என சொல்லுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பலரும் இதுகுறித்து மௌனம் சாதித்தாலும், முன்னணி பிரபலங்கள் கூட இதைப் பற்றி பேச சற்று தயங்கியுள்ளனர். ஆனால், இன்று கலையரசன் தனது அனுபவத்திலிருந்து தன்னிச்சையாக, எந்தவித பயமின்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். பல தரப்பில், ஜாதி சார்ந்த விவாதங்கள் சினிமாவிலும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அது மிக மோசமான அளவில் தொடரும் நிலைமையை, கலையரசன் தனது வார்த்தை மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், கலையரசன் நடித்துள்ள ‘ட்ரெண்டிங்’ திரைப்படம், சமூக வலைதளங்களின் தாக்கம், இளைஞர்களின் உளவியல், மற்றும் மீம்ஸ் கலாச்சாரம் ஆகியவற்றை மையமாக கொண்டதாக உருவாகியுள்ளது.
இதில் கலையரசன், ஒரு முன்னணி இளைஞர் பாத்திரத்தில், நடித்ததோடு சமூகத்தின் எதிரொலியை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் அரசியல் மயமான வன்முறை மற்றும் மைனாரிட்டி சமூகங்களை எதிர்பார்க்கும் பார்வைகள் குறித்து கூறும் வசனங்கள், அவரது நிஜ வாழ்க்கை அனுபவங்களுடனும் ஒத்துப்போகும் என்பதற்கான வாய்ப்பு அதிகாமாக இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கலையரசன் தனது திறமையால் பல கதாபாத்திரங்களில் பிரமிக்கவைக்கும் வகையில் நடித்தவர்.

ஆனால், ஒரு நடிகனின் நட்பு வட்டம், அவரது சமூக பின்னணி, அல்லது அவரது அரசியல் சிந்தனைகள், அவருடைய தொழில்முனைவு வாய்ப்புகளை பாதிக்க கூடாது என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் வில்லனாக இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்..! கொண்டாட்டத்தில் உலக ரசிகர்கள்..!