தமிழ் சினிமாவில் சில நாட்களாகவே இருவரது நடிப்பை பற்றி மட்டுமே பேசிவருகின்றனர். அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் படமான "மாமன்னன்" படம் குறித்தும் அதில் நடித்த இரண்டு நடிகர்களை குறித்தும் தான் அதிகம் பேசி வந்தனர் சினிமா ரசிகர்கள்.. இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும் என கனவு கண்டவர்களின் கனவு தற்பொழுது நிஜமாகி உள்ளது. அதன்படி, தனித்துவமான நடிப்பிற்கும், மனதைக் கவரும் கதைகளுக்கும் என்றென்றும் முக்கிய இடம் வகித்து வரும் நடிகர்களான வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘மாரீசன்’.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்ட ட்ராவலிங் திரில்லர் திரைப்படமான ‘மாரீசன்’, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை 25-ம் தேதியான நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. இப்படி இருக்க, இந்த படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து, வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு, கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். இது ஒரு புது முயற்சியாக, திரைத்துறையில் பார்க்கப்படுகிறது. வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி மேற்கொண்டிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தனது இசையமைப்பால் இப்படத்திற்கு உயிரூட்டியுள்ளார். அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள், கிராமிய சூழலுக்கும் திரில்லர் தளத்துக்கும் இடையிலான அழகான நகர்வை அமைந்துள்ளன. இப்படிப்பட்ட ‘மாரீசன்’ திரைப்படத்தின் ப்ரீக்-காட்சியை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், தனது சமூக வலைதள பக்கத்தில் இதனைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "மாரீசன் படத்தைப் பார்த்தேன் – இது நகைச்சுவைக்கும், மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி உருவாகியிருக்கும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது இந்த படைப்பு. இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக படக்குழுவினரை வாழ்த்துவதோடு, அவர்களுடன் ஒரு அற்புதமான உரையாடலும் மேற்கொண்டேன். பார்வையாளராகவும், படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு புதுமையான, உற்சாகமான சினிமா. மாரீசன்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் 'மாரீசன்'..! பரபரப்பை ஏற்படுத்தும் கதைக்களமாக இருக்குமாம்..!
கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர் ஒருவரின் நேரடி பாராட்டு, இப்-படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது. இந்த புகழ்வார்த்தைகள், படக்குழுவின் உழைப்புக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது. மேலும், ‘மாரீசன்’ ஒரு சாதாரண கிராமிய படம் அல்ல. இது, ஒரு மனிதனின் பயணம், நகைச்சுவை, பரபரப்பு மற்றும் மன அழுத்தம் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ட்ராவலிங் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. அந்த வகையில் வடிவேலுவின் காமெடி மற்றும் ஃபஹத்தின் ஆழமான நடிப்பு ஆகியவை ஒருங்கிணைந்திருப்பதால், இது கலைஞர்களின் திறனை மட்டுமல்ல, படக்குழுவின் கதையாக்க சக்தியையும் நிரூபிக்கும் படமாக அமையப்போகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படமென்பதால், இசை ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை இப்படம் ஏற்பட்டுள்ளது. ‘மாரீசன்’ திரைப்படம், வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் என்ற வித்தியாசமான கூட்டணியுடன், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் இணைந்துள்ளதால், படம் கலையும், வர்த்தகமும் இணையும் ஒரு நல்ல முயற்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலகநாயகன் கமல்ஹாசனின் நேரடி பாராட்டும் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர் படக்குழுவினர், நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மாரீசன்', ரசிகர்களிடமும் சிரிப்பும், சிந்தனையும், சினிமா அனுபவத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கும் படமாக அமையும் என்பது உறுதி.
இதையும் படிங்க: "மாரீசன்" படத்துடன் நேரடியாக மோதும் "தலைவன் தலைவி"..! எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக ரசிகர்கள் பேச்சு..!