தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகியிருக்கும் அற்புதமான படம் என்றால் அதுதான் 'சென்ட்ரல்'. சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் ப்ரமோஷன் விழாவில், ஒருவர் பேசியது தற்பொழுது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதன்படி, 'சென்ட்ரல்' திரைப்படமானது தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இயக்குனர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சோனேஸ்வரி மற்றும் பேரரசு நடித்துள்ளனர்.
இப்படி இருக்க, இந்த படத்தின் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தமிழ் சினிமாவின் நிலைமை, அதன் மீது விழுந்திருக்கும் கலங்கல்கள், மற்றும் சினிமா துறையினர் அரசியலுக்குள் செல்லும் உரிமையைப் பற்றி தனது கருத்துகளை துணிச்சலாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், " எனக்கு ஒரு விஷயம் புரியல.. சினிமாவின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து சினிமாக்காரன் என்றாலே பெண் கொடுக்க யோசிப்பார்கள். மதிக்கவே மாட்டார்கள். அது மட்டுமல்லாமல், சிலர் ‘சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது’ என்கிறார்கள். ஆனால் அதை சொல்ல உங்கள் யாருக்கும் உரிமையில்லை. நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முக்கியமான விஷயம், அவர்கள் வந்த பிறகு என்ன செய்கிறார்கள்? என்பது தான் முக்கியமே தவிர அவர்கள் அரசியலில் வருவது தவறில்லை" என பேசினார்.

அவரது இந்த பேச்சு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இப்படியிருக்க, 'சென்ட்ரல்' திரைப்படம், சமூகத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான மைய கருத்தை தாங்கி வருகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் பாரதி சிவலிங்கத்தின் பபங்களிப்பும், காக்கா முட்டை விக்னேஷின் பங்களிப்பும் இந்த திரைப்படத்தை மக்கள் மனதில் ஆழமாக கொண்டு சேர்ப்பதுடன் அவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வனிதா விஜயகுமாரை வம்பிழுத்த விமர்சகர்கள்..! "உன்னால முடிஞ்சா நிரூபி.. நான் சினிமா விட்டே போறேன்" என சவால்..!
ஆகவே சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக் கருவி அல்ல. அது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. 'சென்ட்ரல்' படம் அதற்கான ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் இயக்குநர் உதயகுமாரின் பேச்சு, சினிமா உலகின் மீதான பார்வையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கூறியது போல, யார் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை, அவர்கள் வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

இதன் மூலம், 'சென்ட்ரல்' திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஒரு சமூக விவாதத்தை தூண்டியுள்ள நிலையில், இப்படம் திரையில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என தெரியவில்லை.
இதையும் படிங்க: இந்த டேன்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! பூஜா ஹெக்டே வெளியிட்ட "மோனிகா" பாடல் வீடியோ..!