தற்பொழுது வெளியாகும் பல ஆக்ஷன் படங்களுக்கு மத்தியதில் தனித்துவமான கதைகளுக்காக பெயர்பெற்று, தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருப்பவர் தான் நடிகரும், இயக்குநருமான சசிகுமார். இவர் சமீபத்தில் நடைபெற்ற 'பிரீடம்' திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து இருக்கிறது. தற்போது 'பிரீடம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், இப்படத்திற்கு முன்னதாக வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 12ம் தேதியான நாளை திரைக்கு வரவிருந்த நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சசிகுமார் பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி சசிகுமார் பேசுகையில், "பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படத்தில் காட்சி ஒன்று வருகிறது. அங்கு ரத்தம் கொடுத்து விட்டு பணம் தருகிறார்கள். நன்றி சொல்லும் போது ரஜினி சொல்வார் இது ‘வெறும் பணம் தானே’ என்று அப்படிப்பட்ட வசனங்களால், நானும் பணத்தை பெரிதாக எண்ணாமல் இருந்தேன். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பணமும் என்னை பெரிதாக எண்ணவில்லை என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. காரணம் பணம் என்பது மதிக்கத் தக்க ஒன்று என்று. நாம அதை மதிக்கிறோம் என்றால் தான் அது நம்மை மதிக்கும்.

இப்போ நான் பணத்தைக் குறை சொல்லவில்லை. அதனாலதான், அதுவும் என்னை வரவேற்க ஆரம்பிச்சிருக்கு "என பணத்திற்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் சசிகுமார். குறிப்பாக சசிகுமாரின் இந்த வார்த்தை, திரையுலகத்தில் பணம், கலை, மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த வெளிப்படையான பார்வையை வெளிபடுத்துவதாக இருக்கிறது. பல ஆண்டுகளாக தனது சொந்த தயாரிப்புகளில், தனக்கே உரிய கதை பாணியில் திரையுலகத்தில் பயணித்த சசிகுமார், பல தருணங்களில் வணிக வெற்றிகளை நோக்கி செல்லாமல், கலை திறனை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளையே மேற்கொண்டு வந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் 'மாரீசன்'..! பரபரப்பை ஏற்படுத்தும் கதைக்களமாக இருக்குமாம்..!
ஆனால், தற்போது வாழ்க்கையின் நுணுக்கங்களை உணர்ந்த பிறகு, அவர் எடுத்துள்ள மாற்றங்கள் அனைத்தும் ஒரு புதிய திறமையான, தெளிவான திரைப்பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. "பணம் என்பது வெறும் பொருள் அல்ல, அது நம் வாழ்க்கையின் ஒரு சக்தி" என்பது போல அவர் பேசியது, பல இளைஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் புதிய சிந்தனையை விதைப்பதாக உள்ளது. இப்படியிருக்க, சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம், குடும்பத்தோடு இலங்கையில் இருந்து வந்த ஒருவரின் வாழ்க்கையின் சோதனைகளை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், உணர்வுப்பூர்வமான போக்குடன் சென்று, வாழ்க்கையின் முக்கியமான சமாளிப்புகளைக் கூறும் வகையில் அமைந்துள்ளது. தற்பொழுது இப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றங்கள் கொண்டு வந்திருந்தாலும், சசிகுமாரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த சூழலில், நடிப்பில், தயாரிப்பில், தனித்துவமான கதை தேர்வுகளில், சசிகுமார் எப்போதும் மாறுபட்ட பாதையில் செல்பவர். அனால் இப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து, பணம் என்ற பரிசுகளுக்கே ஒரு புதுப்பதிவு கொடுத்துள்ளார்.

"நான் பணத்தை மதிக்கவில்லை, அதனால்தான் அது என்னை மதிக்கவில்லை. இப்போது நான் பணத்தை மதிக்கத் தொடங்கிய பிறகு தான், அது என்னை மதிக்க ஆரம்பித்திருக்கிறது" என அவர் கூரிய இந்த வாசகங்கள் இன்று பலரது வாட்சப் ஸ்டேட்டஸ்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: "சினிமாவில் சாதி இல்லையென்று சொல்வது மிகப்பெரிய பொய்" - நடிகர் கலையரசன் காட்டமான பேச்சு..!