அட்லீ இயக்கத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்பத்தில் சின்ன ரோலில் நடித்தாலும், அப்படத்தில், சந்தானத்தின் விளக்கத்தில் மீம்கள் வரைக்கும் சென்று பிரபலமானவர் ஷாக்ஷி அகர்வால்.

பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'ஃபயர்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: இனி ரூ.200 வசூலிக்க தடை..! தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

இதனை அடுத்து அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார் ஷாக்ஷி அகர்வால்.

இதனையடுத்து, தற்பொழுது நடிகைகளின் திருமணம் வரிசையாக நடைபெற்று வருகிறது.

தங்கத்தில் தாலி கட்டுவது, மோதிரம் போடுவது என முறைகள் மாறி கொண்டு இருக்க, நடிகைகள் மஞ்சள் கயிறு தாலியை கழுத்தில் அணிந்த படி செல்வது அவர்களின் அழகை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது.

இவரது திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான்.

இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால், நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போவார் என்று பார்த்தால் தனது கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்தார்.

மேலும், இவரது நடிப்பில் வெளியான ஃபையர் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் இவர் நடித்ததற்க்காக அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்..! காலமானார் 'மனதை திருடிவிட்டாய்' பட இயக்குனர் நாராயண மூர்த்தி..!