• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என் மகன் சூர்யா.. ஜோதிகாவை காதலிக்க தூண்டிவிட்டதே இந்த நடிகை தான்..! ஓப்பனாக பேசிய நடிகர் சிவகுமார்..!

    நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
    Author By Bala Thu, 12 Feb 2026 10:38:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-this-actress-is-reason-for-suriya-jyothika-love-tamilcinema

    தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்து, கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வது, உடல் மொழி மற்றும் நடிப்பில் மாற்றங்களை உருவாக்குவது, சமூகப் பிரச்சினைகளை பேசும் கதைகளில் துணிச்சலுடன் நடிப்பது ஆகியவற்றால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றவர். தற்போது அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படம் குறித்து ரசிகர்களிடம் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தின் தலைப்பே சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தை உணர்த்துகிறது என கூறப்படுகிறது. தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாதபோதிலும், வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாகவும், தற்போது பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவை ஒரு மாறுபட்ட கோணத்தில் காட்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களில் நடித்த அவர், மீண்டும் வலுவான கதையுடன் ரசிகர்களை சந்திக்க வருகிறார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அஞ்சலியா இது..! விதவிதமா.. வித்யாசமான.. லுக்கில் வெளியிட்ட போட்டோஸ்..!

    suriya

    இதனைத் தொடர்ந்து, சூர்யா தற்போது தனது 46 மற்றும் 47-வது திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தற்காலிகமாக ‘சூர்யா 46’ மற்றும் ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றில் அவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும், மற்றொரு படம் குடும்ப பின்னணியுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான கதையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு கோணங்களில் சூர்யாவின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமா வாழ்க்கையில் வெற்றிகளை குவித்த சூர்யா, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக திகழ்கிறார். நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அன்றைய காலத்தில் பெரிய பேசுபொருளாக இருந்தது. பல படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, பின்னர் காதலித்து குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்றும் தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் தம்பதிகளாக இவர்களை ரசிகர்கள் பார்க்கின்றனர்.

    இந்த நிலையில், சூர்யா – ஜோதிகா காதல் திருமணத்திற்கு முக்கிய காரணம் யார் என்பது குறித்து நடிகர் சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். சூர்யாவின் தந்தையுமான மூத்த நடிகர் சிவகுமார், தனது அனுபவங்களையும் மகனின் காதல் வாழ்க்கையையும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில் “சூர்யா – ஜோதிகா காதல் கல்யாணத்துக்கு முக்கிய காரணமே ராதிகாதான்.

    suriya

    ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பில் தனியாக இருந்த சூர்யாவிடம், ஜோதிகாவிடம் போய் பேச சொல்லித் தூண்டியது அவங்கதான். அப்படி ஒரு ஆரம்பம் தான் அந்த காதலுக்கு. நான் என்னோட சினிமா வாழ்க்கையில் 150 கதாநாயகிகளுடன் காதலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். அப்படி இருக்கும்போது, என் மகனோட காதலுக்கு நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?” என்று சிரித்தபடி கூறியுள்ளார்.

    சிவகுமார் கூறிய இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஒரு தந்தையாக மகனின் காதலை புரிந்து கொண்டு ஆதரித்த விதம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. திரையுலகில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருந்தாலும், குடும்ப உறவுகளில் காட்டிய புரிதல் பலருக்கும் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.

    சூர்யா – ஜோதிகா தம்பதியர் திருமணத்திற்கு பிறகும் தனித்தனி பாதையில் சினிமாவில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா பெண்கள் மையப்படுத்திய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் சூர்யா வணிக மற்றும் உள்ளடக்கமுள்ள திரைப்படங்களில் சமநிலை காக்கிறார். இவர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் முன்னேற்றம் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    suriya

    மொத்தத்தில், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும், அவரது குடும்பம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களும் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளன. ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்க, சூர்யா 46 மற்றும் 47 படங்களின் அப்டேட்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் சமநிலையுடன் முன்னேறி வரும் சூர்யாவின் பயணம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதையும் படிங்க: தியேட்டரில் 'பராசக்தி'யை தீயசக்திகள் எதிர்க்கலாம்..! ஆனா ஓடிடியில் ஹிட்.. அடுத்து வெளியாகிறதா அன்கட் வெர்ஷன்..!

    மேலும் படிங்க
    பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை! 2வது ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

    பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை! 2வது ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

    இந்தியா
    முகத்திற்கு நேராக அங்கன்வாடி ஊழியர்கள் கேட்ட ஒரே கேள்வி... சட்டென எழுந்து நடையைக் கட்டிய நயினார்... என்ன கேட்டாங்க தெரியுமா?

    முகத்திற்கு நேராக அங்கன்வாடி ஊழியர்கள் கேட்ட ஒரே கேள்வி... சட்டென எழுந்து நடையைக் கட்டிய நயினார்... என்ன கேட்டாங்க தெரியுமா?

    அரசியல்
    ஆட்சியில் பங்கா?... திமுகவிடம் எதுவும் எடுபடாது... பலமாக சிரித்த படி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த வைகோ...!

    ஆட்சியில் பங்கா?... திமுகவிடம் எதுவும் எடுபடாது... பலமாக சிரித்த படி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த வைகோ...!

    அரசியல்
    திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

    திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

    அரசியல்
    பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு... போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு... கலவர பூமியான கும்மிடிப்பூண்டி...! 

    பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு... போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு... கலவர பூமியான கும்மிடிப்பூண்டி...! 

    தமிழ்நாடு
    டிஜிபி நியமன விவகாரம்… ஒரு வாரம் தான் டைம்…! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு..!

    டிஜிபி நியமன விவகாரம்… ஒரு வாரம் தான் டைம்…! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share