சினிமாவில் இயக்குனரின் மகனாக இருந்தாலும் பல அடிகளையும் வேதனைகளையும் பட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு இன்று யாரும் பிடிக்க முடியாத உயரத்தை தொட்டு இருப்பவர் தான் நடிகர் இளைய தளபதி விஜய். இப்படிப்பட்ட விஜயின் திரை வாழ்க்கை என்று பார்த்தால் 33 வருட காலங்கள் என்றே கூறலாம். இதுவரை 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் விஜயின், ஆரம்பகால சினிமா வாழ்க்கை என்பது மிகவும் மோசமானதாகவே இருந்தது.

இவர் சினிமாவுக்கு வரும் பொழுது ஒல்லியாகவும் கருமை நிறத்திலும் இருந்ததினால் இவரை மக்கள் சற்று ஏற்க தயங்கி இருந்தனர். ஆனால் அவரது நடிப்பை மக்கள் மத்தியில் காண்பிற்கும் அளவிற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு இன்று இளைய தளபதியாக உருவெடுத்து தவெக என்ற கட்சியை உருவாக்கி தலைவராக நிற்கிறார் விஜய். இப்படிப்பட்டவரின் துறை கண்ணோட்டத்தை தற்பொழுது பார்க்கலாம் தமிழ் திரையுலகில் தளபதியாக விளங்கும் நடிகர் விஜயை சினிமாவில் நுழைத்த பெருமை அவரது தந்தையான எஸ். ஏ.சந்திரசேகரை தான் சேரும். இவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தவர், நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் "நாளைய தீர்ப்பு".
இதையும் படிங்க: நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!

இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் நாளடைவில் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து, 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி பட்ட நடிகர் விஜய் தற்பொழுது தனது அரசியல் வாழ்க்கையை முற்றிலும் விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். அதற்காக தனது கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்த சூழலில் விஜயின் பிறந்தநாளான இன்று அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் " The First Roar - Jana Nayagan " வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அந்த வீடியோவின் ஆரம்பத்தில், " என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய் காக்கி உடையில் நடந்து வருவது அட்டகாசமாக உள்ளது. மேலும், கடைசியாக கத்தியை வைத்து மீசையை முறுக்கி விடுவது எல்லாம் அல்ட்டிமேட்டாக உள்ளது" தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜயின் 'ஜனநாயகன்' படத்தை பார்க்கும் ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!