தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, முதல் முறையாகப் போட்டியிட்ட தேர்தலிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் முன்னிலை பெற்றிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், மூத்த நடிகரும், தனது அரசியல் எண்ணங்களைப் பகிர்ந்து வருபவருமான ரஜினிகாந்த், விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் பகிரங்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்:
“நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இரு நடிகர்களும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வரும் நிலையில், ஒருவர் மற்றவரின் அரசியல் பயணத்தைப் பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த வெற்றியை “மக்கள் எழுச்சி” என்று கொண்டாடுகின்றனர். முதல் தேர்தல் அனுபவத்திலேயே இத்தகைய முன்னிலை என்பது, தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியின் எழுச்சியைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். விஜய் தனது கட்சியின் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் முழு பலனும் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி..!! தனது ஸ்டைலில்.. ஒரே வார்த்தையில் மம்மூட்டியின் 'நச்' பதில்..!! ஆடிப்போன ஏர்போர்ட்..!!