டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தமிழ் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது கவர்ச்சியான நடன வீடியோக்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஆரம்பத்தில் சாதாரண டிக்டாக் வீடியோக்களை வெளியிட்ட இலக்கியா, பின்னர் கவர்ச்சி மற்றும் அரைகுறை ஆடைகளுடன் வீடியோக்கள் பதிவேற்றி லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை பெற்றார். இந்தப் புகழ் அவருக்கு ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளியானது, ஆனால் இலக்கியாவின் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: திரைப்படமாகிறது பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு..! படத்தின் தலைப்பே சும்மா அதிருதே..!
டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, இலக்கியா இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான பதிவுகளைத் தொடர்ந்தார். அவரது சோப்பு நுரை, டவல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின. ஆனால், இவரது பதிவுகள் பலரால் விமர்சிக்கப்பட்டன, மேலும் சிலர் இவரை பணத்திற்காக சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.
2023-ல் நடிகை ஷகீலாவுடனான நிகழ்ச்சியில் இலக்கியாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பேச்சு வைரலானது, அவரது கடினமான கடந்த காலத்தை வெளிப்படுத்தியது. மேலும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இவர் பெயரில் மோசடி நடப்பதாக புகார் அளித்தது கவனத்தை ஈர்த்தது.
இலக்கியாவின் பயணம், புகழையும் சர்ச்சையையும் ஒருங்கே பெற்ற ஒரு எடுத்துக்காட்டு. இவரது அடுத்த கட்ட முயற்சிகள் சினிமாவிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன. டிக்ட்டாக டிக்டாக், இன்ஸ்டாவை தாண்டி தற்போது ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் இலக்கியா.
இந்நிலையில் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் இவர், அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக அவரை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், அவரது நண்பர் இலக்கியாவை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என இலக்கியா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவை சேர்த்து பதிவிட்ட ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 12 படங்கள்..! வீக்கென்டில் அதிரடியாக ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் ஷாக்..!