சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில்+2 படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி பள்ளி வாசலில் அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிட்டு சென்றார் அப்போது எதிரில் உள்ள கடைக்கு மாணவி சென்றபோதுகாரில் வந்த ஆறு பேர் 17 வயது மாணவியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர்.
மானாமதுரையில் இருந்து அந்த பெண்ணை காரில் கடத்தி வந்த கும்பல் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வரும் பொழுது அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து தப்பித்து குதித்து தப்பியது. காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
காரில் இருந்த ஆறு பேரும் முகத்தைக் கர்சீப் ஆல் மறைத்திருந்தனர் அடையாளம் தெரியாத ஆறு பேர் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து தப்பிச் சென்றனர் . பள்ளிக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: #ViralVideo சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்... ஆம்புலன்ஸுக்குள் போராடிய நோயாளி உயிரைக் காக்க பெண் காவலர் செய்த காரியம்...!
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்… ஐகோர்ட்டில் அவசர முறையீடு!