தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்ற சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய உயர்நிலை வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு +2 தேர்வுகள் மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றன. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எனவே, இந்த முடிவுகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். முக்கிய இணையதளங்கள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, இந்த இணையதளங்களுக்குச் சென்று, பதிவு எண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர், முடிவுகள் திரையில் தோன்றும். தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே இணையதளங்கள் நெரிசலில் இருக்கும் என்பதால், மாணவர்கள் பொறுமையுடன் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு இன்னும் எளிதாக முடிவுகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. 78452 52525 என்ற எண்ணுக்கு 'hi' என்று செய்தி அனுப்பினால், வாட்ஸ் ஆப் மூலம் +2 தேர்வு முடிவுகளைப் பெறலாம். இந்த வசதி நெரிசலைத் தவிர்க்கவும், மாணவர்களுக்கு விரைவான அணுகலை வழங்கவும் உதவும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 481 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 83 மாணவ மாணவிகள் தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!
ஆங்கில தேர்வில் 21 பேர் சதம் அடித்துள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் கணித தேர்வில் 732 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பின் எடுத்துள்ளனர். இயற்பியலில் 15, வேதியலில் 632, உயிரியல் 784, தாவரவியல் 311, விலங்கியல் 18 பேர் என பல்வேறு பாடங்களில் ஏராளமான மாணவர்கள் சதம் அடித்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வுக்கு மே 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வில் 95.20% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!