இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!

கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று நடந்தது. இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதன்படி இந்த 10-ஆவது நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது ; நாம் நமது நாட்டின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்று சேர்ந்து டீம் இந்தியா போல செயல்பட்டால், எந்த இலக்கையும் அடையலாம். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்துவிட்டால், பாரதமும் வளர்ச்சி பெற்றதாக மாறிவிடும். நம் நாட்டின் 140 கோடி இந்தியர்களின் விருப்பமும் அதுதான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு சுற்றுலா தலத்தையாவது உலக தரத்திற்கு ஈடாக உருவாக்க வேண்டும். அங்கு அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் அருகாமையில் இருக்கும் மற்ற நகரங்களையும் சுற்றுலா இடமாக மேம்படுத்த அது வழி வகுக்கும். அரசுகள் பெண் பணியாளர்களை மரியாதையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் சட்டங்கள், கொள்கைகளை உருவாக்க வேண்டும். அரசின் கொள்கைகள் சாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மாற்றத்தை உணர்வார்கள். அப்படிப்பட்ட மாற்றம்தான் ஒரு இயக்கமாக மாறும்.

140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நாம் ஒரு குழுவாக இயங்க முடியும். அதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன என பிரதமர் மோடி பேசினார்.இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! பிரதமர் மோடியை தனியே சந்திக்க டைம் கேட்கும் மு.க.ஸ்டாலின்..!