இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மார்ச் 25, 2026, வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 26, 2026 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள், ஏப்ரல் 2, 2026, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 3, 2026, வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 5, 2026, வாக்குப்பதிவு நடைபெறும் நாள் ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 (திங்கட்கிழமை), தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் 2026..: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை!

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, முக்கிய இடமாற்றங்களைச் செய்யவோ முடியாது.
16-ஆவது தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பே அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் முடிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும், தேர்தல் அறிக்கைகளை இறுதி செய்வதிலும் வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!