தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், முதல் நாளிலேயே பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்புப் படை ஆகியவற்றுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படை, மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பு செய்யவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பெண்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்தப் படை, புகார்களைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தவெக அரசின் முதன்மை வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், ஆட்சி அமைந்து சில நாட்களே ஆன நிலையில், சில பகுதிகளில் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ரீடிங் எடுக்க வந்த ஊழியர் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாய் தந்தை பணிக்கு சென்ற நிலையில் சகோதரர் வெளியில் விளையாட சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!
அப்போது வீட்டிற்கு ரீடிங் எடுக்க மின் ஊழியர் சென்றுள்ளார். சிறுமி தனியாக இருப்பதை அறிந்து பேச்சு கொடுத்து முதல் மாடிக்கு தூக்கிச் சென்று கொலுசை கழட்டி விட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. வெளியில் விளையாட சென்ற சகோதரன் வீட்டிற்கு வந்ததை எடுத்து அந்த ஊழியர் தப்பியதாக கூறப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச்சென்ற மின்சார ஊழியரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!