புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பெண்ணை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அதில் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில் மற்றொருவரை இன்னும் கைது செய்ய முடியாமல் தேடி வந்தனர். சம்பவம் நடந்து 40 மணி நேரத்தை கடந்தும் இன்னும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை கைது செய்யவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மழையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்மணியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 56 வயதுடைய மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சேகர் என்பவரை கைது செய்திருக்கின்றனர். திண்டுக்கல் அருகே பதுங்கி இருந்த சேகரை புதுக்கோட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!