சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக திமுக சார்பில் அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ எம்.கே. மோகன் மகன் கார்த்திக் மோகன் களமிறக்கப்பட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா, அரசியல் உத்தியாளராக அறியப்படுபவர். முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக விலகிய பின்னர், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
த.வெ.கவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், சென்னைப் பகுதியில் கட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். நேற்றைய தினம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டு விடுவார் என்று அறிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆதரவு தெரிவித்து பரப்புரை நடத்தினார். வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக சபரீசன் நேரடியாகக் களமிறங்கினார். வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க.வின் தொகுதி முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக் கூட்டத்தில் சபரீசன் கலந்துகொண்டார். அவருடன் அவரது மனைவியும், முதலமைச்சரின் மகளுமான செந்தாமரை சபரீசனும் பங்கேற்றார். அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். இந்த நிகழ்வில் சபரீசன், “விஜய் கட்சியால் எந்தப் பாதிப்பும் இல்லை; தி.மு.க.வின் வெற்றி 100 சதவீதம் உறுதி” என்று உறுதியாகக் கூறினார். மேலும், “நல்ல எம்.எல்.ஏ-வாக கார்த்திக் மோகன் பணியாற்றுவார்” என்றும் பேசினார்.
இதையும் படிங்க: அனுதாப ஓட்டு வேணுமா? பழைய ஆர்எஸ்எஸ் டெக்னிக்..! ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்த ஜூலி..!!
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்து உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சரின் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும் என்று ஆதவ் அர்ஜுனா உறுதிப்படக் கூற கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... போர்க்கொடி தூக்கிய ஆதவ்... குற்றவாளிகளுக்கு சிறை..!!